ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (16:50 IST)

இமாச்சல பிரதேச முதல்வரை தேர்ந்தெடுத்த பாஜக மேலிடம்....

இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆண்ட காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. 68 சீட்டுகளில் 44 சீட்டுகளை பாஜகவும், 21 சீட்டுகளை காங்கிரஸ் பெற்றனர்.
 
புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று கூடியது. அதில் பாஜக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டசபைக்கு இவர் 5 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழு தலைவராக பதவி வகித்துள்ளார். 2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.