திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2017 (06:12 IST)

விஜய் முதலமைச்சராக வேண்டும்: நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நடிகர்கள் முதலமைச்சர் கனவில் மிதப்பது கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து யாரும் இதுவரை அரசியலில் வெற்றி பெறவில்லை.



 
 
சிவாஜி முதல் விஜயகாந்த் வரை பல நடிகர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், விஜய் உள்பட ஒருசில நடிகர்கள் முதலமைச்சர் கனவில் உள்ளனர். ஒருசிலர் நேரடியாகவும், ஒருசிலர் மறைமுகமாகவும் இதை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் விஜய் கொடுக்கும் வேலையை பொறுப்பாக செய்பவர் என்றும், நல்ல எண்ணம் கொண்டவர் என்றும், அவர் முதலமைச்சராக வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நடிகர் சூர்யா, திரைப்பட விழா ஒன்றில் கூறியுள்ளார்.