திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (10:35 IST)

ராஜஸ்தான் முதலமைச்சர் பெயரில் இந்தியில் முதல் இமெயில் ஐடி:

இதுவரை இந்தியாவில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே இமெயில் ஐடி உருவாக்கப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக ராஜஸ்தான் அரசின் தீவிர முயற்சியில் இந்தியில் இமெயில் ஐடி உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது

ராஜஸ்தான் மாநில பிரபல தனியார் ஐடி நிறுவனம் ஒன்று இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்கள் இமெயில் ஐடி உருவாக்கி அதை கையாளுவதில் சிக்கல் இருந்த நிலையில் தற்போது தாய்மொழியான இந்தியில் இமெயில் ஐடி வசதி தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ராஜஸ்தான் மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் இந்தி இமெயில் ஐடி அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அவர்களின் இமெயில் ஐடியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது