1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (21:07 IST)

இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை : பதறவைக்கும் சம்பவம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொடுக்கான்பட்டி கிராமத்தில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் கோவிலில் சில தினங்களாக   திருவிழா நடைபெற்றது. இக்கோவில்திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு நாடகம் நடைபெற்றது.இந்த நாடகத்தை ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.
இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அண்டை ஊரான  கோவில்பட்டியில் வசிக்கும் சுப்பிரமணியன் மகன் ராம்பு (வயது 23), என்பவரும் அவரது நண்பர்கள் தங்கையா (30), சுபாஷ் (19), திவாகர் (25) ஆகியோர் சென்றுள்ளனர்.
 
இந்த நாடமெல்லாம்  முடிந்தது மூவரும் ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால்  வழியில் மற்றொரு சமுதாயத்தினர் வசிக்கின்ற இடத்திற்கு அவர்கள் வந்தபோது அப்பகுதியில் வசிக்கும் சிலர் அவர்களை வழிமறித்தது. இந்த  நேரத்தில் எங்கள் பகுதியில் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டு தகராறு செய்தனர்.
 
இது கைகலப்பாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் பலமாக தாக்கிக்கொண்டனர். இதில் அந்த ஊரைச் சேர்ந்த சுமார் 10க்கும்  மேற்பட்டவர்கள்  ராம்பு உள்ளிட்ட 4 பேரையும் பலமாக அடித்தனர். 
 இதில் படுகாயத்துடன் ராம்பு கீழே விழுந்தபோது சிலர் கல்லை தூக்கி ராம்பு மீது போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். பின்னர் அருகில் உள்ளவர்கள் ராம்புவை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ததனர்.
 
ஆனால் பலத்த காயமடைந்த ராம்பு நேற்று சிகிச்சை பலனின்றி ராம்பு உயிரிழந்தார். மற்ற 3 பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பற்றி கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தத் தாக்குதல் நடத்தியதாக கொடுக்காம்பட்டி காலனியைச் சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றதாகத் தகவல் வெளியாகிறது.