திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:42 IST)

குலாம் நபி ஆசாத் துரோகம் செய்து விட்டார்: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

gulam
குலாம் நபி ஆசாத் உண்மை முகத்தை காட்டி காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் பிரபலம் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம்நபி ஆசாத் இன்று காலை அறிவித்திருந்தார் 
 
அவரது விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் என்றும் அவர் இப்போது உண்மை முகத்தை காட்டி கட்சிக்கு துரோகம் செய்து விட்டு வெளியேறி விட்டார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார் 
 
மேலும் நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த காங்கிரஸ் அமைப்பு பாஜகவை எதிர்த்து போராடும் போது குலாம் நபி ஆசாத் மட்டும் விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.