புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (18:01 IST)

உங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல - பாஜக எம்.பி ’சர்ச்சை ‘ பேச்சு

சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவின் பிரக்யா சிங், உங்கள் கழிவறையைச் சுத்தம் செய்வது என்வேலை அல்ல என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதிக்கு சென்ற பிரக்யா சிங், பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார்.அப்போது கூட்டத்திலிருந்து ஒரு தொண்டர் :,தன் வசிக்கும் பகுதியில் சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார். 
 
இதற்கு பதிலளித்த பிரக்யா சிங் : நான் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது உங்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய அல்ல. அது என் வேலை அல்ல என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் நான் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதற்காக நேர்மையாகப் பணியாற்றுவேன். எம்.எல்.ஏ. கவுன்சிலர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அதனால் உங்கள் குறைகள் உங்கள் பகுதியில் உள்ள பிரதிநிதியுடன் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். மேலும் எனக்கு அடிக்கடி போன் செய்து புகார் செய்யாதீர்கள் என்று தெரிவித்தார்.
 
இவரது இப்பேச்சு பாஜகவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு முன்னர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்ச்சேவை தேசபக்தர் என்று கூறி  சர்ச்சையில் சிக்கியவர் பிரக்யா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.