புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (07:15 IST)

பாஜகவுக்கு எதிரான பத்திரிகைகள்! பட்டியல் தயார், நடவடிக்கை எப்போது?

இந்தியா முழுவதும் பெருவாரியான வெற்றியைப் பெற்று மத்தியில் ஒரு மெஜாரிட்டியான ஆட்சியைத் பாஜக அரசு செய்து கொண்டிருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பாஜகவிற்கு தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக பத்திரிகைகளும் எதிர்ப்பாக இருக்கின்றது என்பது கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும் 
 
தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலான ஊடகங்களில் உரிமையாளர்கள் திமுக கூட்டணி கட்சியில் இருப்பதால் பாஜகவுக்கு எதிரான செய்திகளை அதிகம் வெளிவந்து கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை தயாரிக்கும் பணியை முன்னணி பத்திரிகையாளர் ஒருவரிடம் பாஜக தலைமை ஒப்படைத்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அந்த பத்திரிகையாளரும் இது குறித்து ஒரு நீண்ட ஆய்வு செய்து ஒரு நீளமான பட்டியலை தயாரித்து பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் பாஜகவை கடுமையாக எதிர்த்து செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஊடக வட்டாரத்தில் ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது வதந்தியா? அதுவே உண்மை செய்தியா? என்பது போகப் போகத் தெரியும்