1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (12:12 IST)

எல்லா ருபாய் நோட்டுகளையும் மாற்ற 7 மாதம் ஆகும் - ப.சிதம்பரம் பகீர் தகவல்

எல்லா ருபாய் நோட்டுகளையும் மாற்ற 7 மாதம் ஆகும் - ப.சிதம்பரம் பகீர் தகவல்

தற்போது புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு, இணையான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மக்களுக்கு வழங்க இன்னும் 7 மாதம் ஆகும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுகுறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:
 
ருபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. நிலைமைய சமாளிக்க எவ்வளவு நாளாகும் என்பது புரியாமல், நேரத்திற்கு எதிராக அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் ரூ.2100 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. 
 
ஒரு மாதத்திற்கு ரூ. 300 கோடி புதிய நோட்டுகளை மட்டுமே அரசால் அச்சடிக்க முடியும். எனவே ரூ.2100 கோடி மதிப்பிலான அனைத்து நோட்டுகளுக்கும், புதிய நோட்டுகள் அச்சடித்து மக்களுக்கு வழங்க இன்னும் 7 மாதங்கள் ஆகும். 
 
அதனால்தான் அவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார்கள். இதுபற்றி விளக்கத்தை அரசு கொடுக்கவில்லை. 500 மற்றும் 1000 ரூபாய் அச்சடிக்க முடிவு செய்துள்ளார்கள் சரி. எதற்காக 2000 ரூபாய் நோட்டு?.  அச்சடிக்கும் நேரத்தை குறைக்கவே இப்படி செய்துள்ளார்கள். எனவே நிலைமை சீரடைய இன்னும் 6 அல்லது 7 மாதங்கள் ஆகும்.
என்று அவர் கூறியுள்ளார்.