திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (23:51 IST)

மார்ச் 29ஆம் தேதி விண்ணில் பாய காத்திருக்கும் இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள்

இஸ்ரோ அவ்வப்போது இந்தியாவின் முன்னேற்றத்திற்காக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரும் நிலையில் மார்ச் 29ஆம் தேதி GSAT-6A என்னும் புதிய தொலைத்தொடர்பு செயற்கை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோவின் இந்த புதிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான GSAT-6A ஜியோசைன்ரோனஸ் செயற்கைக் கோள் என்று அழைக்கப்படுகிறது. இதன் எடை 2140 கிலோ என்பதும் இந்த செயற்கைக்கோள் உயர் சக்தி கொண்ட எஸ்-பேண்டு (S-Band) செயற்கைக்கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மார்ச் 29ஆம் தேதி சரியாக மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ள இந்த செயற்கைக்கோள். ஜிஎஸ்எல்வி எம்.கே. II என்ற ராக்கெட் மூலம் விண்ணில் பாய காத்திருக்கின்றது. இந்த செயற்கைக்கோள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு விண்ணில் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பிய GSAT-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளை விட இந்த GSAT-6A எடை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.