தலா 10 லட்சம் நிதியுதவி தர தயார்: இன்ஃபோசிஸ் நிறுவனம் அதிரடி

info
Last Modified திங்கள், 18 பிப்ரவரி 2019 (10:08 IST)
புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.  இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.
 
உயிரிழந்த வீரர்க்ளின் குடும்பங்களுக்கு நாடெங்கிலும் இருந்து ஆறுதல்களும் நிதியுதவியும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
 
இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம், பாகிஸ்தானின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :