செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 11 டிசம்பர் 2019 (08:44 IST)

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். மேலும் இச்சட்டப்படி அகதிகளாக குடியேறும் இந்த 6 மதத்தவர்களும் 6 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக விதிப்படி 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் இஸ்லாமியர்களும் இலங்கை தமிழர்களும் இல்லை என்பாதால் இதற்கு காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் 130 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர், மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்த 6 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சட்ட திருத்தத்தை கைவிடுமாறு வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், இயக்குனர் நந்திதா தாஸ் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.