1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:33 IST)

இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஐபோன்15 சீரிஸ் போன்கள்! விலை இவ்வளவா?

iPhone 15 series
அமெரிக்காவில் செப்டம்பர் 12ஆம் தேதி ஆப்பிள் நிகழ்ச்சியில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் வெளியான நிலையில் இன்று முதல் இந்தியாவில் இந்த போன்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
* ஐபோன் 15
* ஐபோன் 15 பிளஸ்
* ஐபோன் 15 ப்ரோ
* ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
 
மேற்கண்ட நான்கு மாடல்களில் ஐபோன்15  இன்று வெளியாக இருப்பதாகவும் இந்தியர்கள் இந்த ஐபோனுக்கு மிகப்பெரிய அளவில்  வரவேற்பு தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  
 
மேலும் இந்த ஐபோனின் விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 900 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
ஐபோன் 15 சீரிஸ் முந்தைய ஐபோன் மாடல்களை விட மேம்பட்ட கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை 48MP முக்கிய கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்களைக் கொண்டிருக்கும். அவை மேம்பட்ட செயல்திறன் கொண்ட A16 Bionic சிப்ஸையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran