புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ்கியான்
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (15:27 IST)

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம்(PF) உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.இதில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பின், அதை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் உள்ளது. அந்த தொகைக்கு மத்திய அரசால் குறிப்பிட்ட சதவிகித வட்டியும் வழங்கப்பட்டுவருகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை,  மத்திய அரசின் , தொழிலாளர் வைப்புநிதி நிறுவனம் (EPTF) என்ற அமைப்பு நிர்வகித்து இயக்கி வருகிறது.
 
கடந்த 2017 - 18 ஆம் நிதி ஆண்டில் தொழிலாளர்  வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய அரசு தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வகிதம் 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக மத்திய அரசு  இன்று உயர்த்தியுள்ளது. அரசின்  இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.