செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (20:06 IST)

இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி பதவி விலக முடிவு.

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து புதிய பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். இந்த நிறுவனத்தின்  தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வருபவர் நிலஞ்சன் ராய். இவர் ராஜினாமா செய்யவுள்ளார்.

இவர் , 2018 ஆண்டில் இருந்து உயர் பதவியில் இருக்கும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகவுள்ளார்.

எனவே அடுத்த நிதி அதிகாரியை தேர்வு செய்வதற்காக இயக்குனர் குழுவினர் கூடி ஆலோசனை செய்தனர். இதில்,   நிலஞ்சன் ராய்க்கு பாராட்டுகள் கூறினார். அடுத்த தலைமை  நிதி அதிகாரியாகவும், முக்கிய நிர்வாகியாகவும் ஜெயேஷ் சங்ரஜ்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இவர், அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த நிலையில், மார்ச் 31 வரை நிலஞ்சன் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.