ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (09:56 IST)

போதிய பயணிகள் இல்லை: சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து..!

flight ayoti
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து கிளம்ப இருந்த 10  விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து தினந்தோறும் ஏராளமான விமானங்கள் உள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று கிளம்ப வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து விமான நிர்வாகம் கூறியதாவது, இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து புறப்படும் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளின் டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து கிளம்பும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல், பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.


Edited by Siva