ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2024 (16:06 IST)

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

Flight
சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, 2020 மார்ச் மாதத்தில் சென்னை-ஜெட்டா விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, நிலைமை மீண்டும் சாதாரணமாக வந்தபிறகும், சென்னை-ஜெட்டா-சென்னை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கவில்லை.

இந்த நிலையில், சவுதி ஏர்லைன்ஸ் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை-ஜெட்டா-சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கியது. தற்போது, திங்கள் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது.

முதல் விமானம், நேற்று மதியம் 12 மணிக்கு, 132 பயணிகளுடன் ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு, மாலை 5.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர், அதே விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, 222 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது.

சென்னை-ஜெட்டா இடையிலான இந்த நேரடி விமானம், 5 மணி 30 நிமிடங்கள் பயண நேரம் ஆகும்.   விரைவில், திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் கூட இந்த விமானம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.



Edited by Siva