1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (08:28 IST)

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்; விண்ணில் பாயும் விக்ரம்?

rocket
இந்திய விண்வெளித்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதல் தனியார் ராக்கெட் இம்மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்தியாவில் விண்வெளி ராக்கெட் ஏவுதல் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இஸ்ரோ மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற விண்வெளி நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ‘விக்ரம் – எஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

இந்த ராக்கெட் இம்மாதம் 12ம் தேதியிலிருந்து 16ம் தேதிக்குள் வானிலை நிலவரத்தை கணக்கிட்டு ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edited By Prasanth.K