1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (13:03 IST)

பெர்சிவரன்ஸை வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண்! – யார் இந்த ஸ்வாதி மோகன்!

நாசாவின் பெர்சிவர்ன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயில் கால்பதித்துள்ள நிலையில் அதன் திட்ட குழுவில் ஒருவரான ஸ்வாதி மோகன் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது.

இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத காலமாக விண்வெளி பயணம் மேற்கொண்ட பெர்சவரன்ஸ் இன்று செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்நிலையில் இந்த பெர்சிவர்ன்ஸ் திட்டத்தின் விஞ்ஞான குழுவில் உள்ள இந்திய வம்சாவளியான ஸ்வாதி மோகன் புகழ்பெற்றுள்ளார். இந்தியாவின் பெங்களூரில் பிறந்த ஸ்வாதி மோகன் ஒரு வயதிலேயே அமெரிக்கா சென்று விட்ட நிலையில் அறிவியல் மீது நாட்டம் கொண்ட அவர் விண்வெளி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன் அனுப்பும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்வாதிக்கு இந்தியாவிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.