வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:01 IST)

லடாக் மோதலில் உயிரிழந்த சீன வீரர்கள் எத்தனை பேர்?

லடாக் மோதலில் உயிரிழந்த சீன வீரர்கள் எத்தனை பேர்?
கடந்த ஆண்டு இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டதாகவும் இதில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சீனாவின் தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது லடாக்கில் சீன வீரர்கள் பலி எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியா சீனா எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 4 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் கௌரவிக்கும் விதமாக பதக்கங்களையும் சீன அரசு அறிவித்துள்ளது
 
இந்திய சீன எல்லையில் 40க்கும் மேற்பட்டோர் சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சீன வீரர்கள் மட்டுமே பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது