ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (07:59 IST)

ஃபானி புயலை சமாளித்த போலீசார்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஃபானி புயல் ஒடிஷாவைத்தான் தாக்க போகிறது என்று வானிலை மையம் உறுதி செய்தவுடன் அம்மாநில அரசின் அறிவுறுத்தலின்பேரில் ஒடிஷா போலீசார் உடனே களத்தில் இறங்கினர்.
 
ஒடிஷாவை சேர்ந்த பினக் மிஸ்ரா என்ற ஐபிஎஸ் அதிகாரி, தனது அதிகாரத்தை மறந்து மக்களோடு மக்களாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றும், கையெடுத்து கும்பிட்டு உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார். அவருடைய பணிவான வேண்டுகோளினால் அந்த பகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு மாறினர்
 
அதேபோல் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது சொந்த மோட்டார் சைக்கிளில் தனது செலவில் பெட்ரோல் போட்டு புயல் பாதிக்கும் பகுதியில் உள்ளவர்களை வெளியேற்ற உதவினார். காவல்துறை உயரதிகாரி ஒருவர் பெண்களை புயல் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றபோது ஒரு பெண்ணின் கையில் இருந்த குழந்தை அழுது கொண்டிருந்ததால் அந்த குழந்தையை தனது கையில் வாங்கி ஒரு கிலோ மீட்டர் வரை அவர்களுடன் நடந்து வந்தார். முதியவர்கள் பலரை போலீசார்களே கைத்தாங்களாக தூக்கி வந்தனர்.
 
புயலுக்கு பின் மின்னல் வேகத்தில் மீட்புப்பணிகள் தொடங்கின. 24 மணி நேரத்திற்குள் சாலையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இதே ஒடிஷாவில் புயல் வந்தபோது சுமார் பத்தாயிரம் பேர் பலியாகினர்.

ஆனால் ஃபானி புயலால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே. இதனால்தான் ஐநாவிடம் இருந்தே பாராட்டு கிடைத்தது. ஒடிஷா செய்த முன்னேற்பாடுகளில் பாதியை கூட கஜா புயலின்போது தமிழக அரசு செய்யவில்லை என்பதே சமூக வலைத்தள பயனாளிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.