வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (20:48 IST)

பறவை மோதியதில் இந்திய விமானம் விபத்து

இந்திய விமானப்படையில் உள்ள மிக் 21 ரக போர் விமானம் ஒன்று பறவைமோதியதால் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர் என்ற இடத்தில், இன்று இந்திய விமானப்படையை சேர்ந்த மிக் 21 ரக விமானத்தின் மீது பறவை மோதியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் விமானத்தை இயக்கிய விமானி  பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிக் கொண்டார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதேபோல் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று கஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் எம் ஐ 17 என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இருவர் விமானிகள் ஆவர்.