1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:40 IST)

இந்திய கோடீஸ்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வருமானவரி தாக்கலில் தெரிந்த தகவல்!

money
இந்தியாவில் ஜூலை 31-ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் கால அவகாசம் முடிந்த நிலையில் இதுவரை தாக்கல் செய்தவர்களில் உள்ள தகவலின்படி இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.25 இலட்சமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.31 லட்சமாக மாறி உள்ளது 
அதாவது ஒரே வருடத்தில் 6 லட்சம் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வருமானம் பெறுவோரின் எண்ணிக்கை 77 இலட்சம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது