1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (19:05 IST)

இந்தியாவில் இருந்து அதிகமாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. என்ன காரணம்?

Flight
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் அதிகமான அளவில் கோடீஸ்வரர்கள் வெளிநாடுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கைகளும் அதிகமாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக தெரிகிறது.
 
குறிப்பாக இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள் ஐக்கிய அரபு நாட்டுக்கு சென்று உள்ளனர்  என்றும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சவுதி அரேபியாவுக்கு சென்ற கோடீஸ்வரர்களை எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல், அரசியல், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகளை விட அரபு நாடுகளில் வசதிகள் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்த்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran