செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (09:56 IST)

அதானி மீது அமெரிக்காவில் வழக்கு: அதானி பங்குகள் விலை கடும் சரிவு

இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதானி நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூரிய மின்சார விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் லஞ்சமாக அதானி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
அதானியின் செயல் வெளிநாட்டு முதலீடு சட்டப்படி தவறு என கூறியுள்ள நிலையில், நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அதானி மட்டுமின்றி, அவருடைய உறவினர்கள் உள்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி எனர்ஜி, அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் பத்து சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran