68 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: இன்று தீர்ப்பு..!
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தியதால் 68 பேர் உயிரிழந்த நிலையில் 229 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு இந்த விவகாரம் குறித்த மனுக்களை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அரசியல் கட்சிகளின் மனு மீதான தீர்ப்பை தமிழகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva