திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (10:17 IST)

2024 நாடாளுமன்றத் தேர்தல்: பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்

Election Commission
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கப்படுவதாகவும் இந்த பயிற்சியில் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை சரி பார்ப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என்றும் மிக விரைவில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran