செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:48 IST)

ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு பின்னடைவு…!

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான கே எல் ராகுல் ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார். லக்னோ அணிக்கு விளையாடிய அவருக்கு  தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இழந்தார்.

இந்நிலையில் இப்போது NCA – வில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் விரைவில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் தகவல்களின் படி அவர் காயம் முழுவதுமாக குணமாக வாய்ப்பில்லாததால் அவர் ஆசியக் கோப்பையில் இடம்பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக அணியில் கடந்த சில மாதங்களாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.