திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (19:21 IST)

கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி!

பிஆர்எஸ் மைதானத்தில் கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் அவர்களுக்கு உடற்பயிற்சிகள், போன்றவை வழங்கப்படுகிறது.
 
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில் மூச்சுப்பயிற்சி உட்பட பல்வேறு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் வழங்கினார்.
 
இனிவரும் காலங்களிலும் வாரந்தோறும் ஆயுதப்படை காவலர்களுக்கு யோகாசன பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.