1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:13 IST)

’இந்திய ராணுவ ஹெலிகாப்டர்’ விழுந்து விபத்து : பரபரப்பு சம்பவம்

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இந்திய ராணுவ விமானியும் பூடான் ராணுவ விமானியும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பூடான் நாட்டில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. பயிற்சி அளித்த இந்திய ராணுவ வீரரும் பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின்றன.


இந்திய ராணுவத்துக்கு சொந்தமான
ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் 1 மணி அளவில், பூடான் நாட்டில் உள்ள யோங்க்புல்லா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரை அருணாசல பிரதேசத்தின் கிர்மு என்ற இடத்திலிருந்து யோங்க்புல்லா என்ற இடத்திற்கு வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.