புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (19:44 IST)

முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் யார்?

உலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி - ஷ்லோக்கா மேத்தா திருமணம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதை அடுத்து இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி உலக பிரபலங்களும் மும்பையில் குவிந்துள்ளனர். 
 
இந்த நிலையில் இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார்.  அதேபோல் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் குறிப்பாக ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், போன்ற நடிகர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்திற்கு முந்தைய நாள் நடன விழாவில் மகன் ஆகாஷ் அம்பானியுடன் இணைந்து முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியுடன் நடனம் ஆடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த திருமணத்தில்  முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயர் அவரது மனைவி செரி ப்ளேயர்,  கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவருடைய மனைவி அஞ்சலி பிச்சை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவருடைய மனைவி அஞ்சலி ஆகியோர் உள்பட பலர் வருகை தந்துள்ளனர். 
 
மேலும் சாம்சங் துணைத் தலைவர் லீ, பெல்ஜிய அரசியல் தலைவர் வெரோனிக் கெப்பர், நெட்ஃபிளிக்ஸ் துணை நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்க்ஸ், சவுதி எண்ணெய் வளத்துறை அமைச்சர் காலித் அல் ஃபலி, கோககோலா சிஇஓ ஜேம்ஸ் கின்ஸி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கிறிஸ்டோஃபர் கெப்பர், என பல உலக தலைவர்களும் தொழிலதிபர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.