1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (17:58 IST)

தடை செய்யப்பட்ட ஆப்களை டவுன்லோட் செய்தால் என்னவாகும்?

தடை செய்யப்பட்டுள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.  
 
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.  
 
மத்திய அரசின் தடை புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்ய மட்டுமே. பழைய யூசர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கும் பக்கவாக செக் வைத்தது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.  
 
தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு காரணங்கள் கருதி சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், அவை பதிவிறக்கம் செய்யக் கிடைத்தாலோ அல்லது அவற்றை வேறு வழியில் பயன்படுத்தினாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.