வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (07:04 IST)

ஒருநாள் கொரோனா மரணம்: அமெரிக்காவை முந்திய இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14லட்சம்  இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதும், கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனாவால் 632 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் 587 பேர் பலியாகினர் என்பதும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் மரணம் அடைந்தனர் என்பதும், ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1.48 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றில் இருந்த 80.43 லட்சம் பேர் குணம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 39.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 21.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரானா தொற்றால் இதுவரை 11.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 37,143 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது