வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (08:20 IST)

வெள்ளி செங்கலால் கட்டப்படும் ராமர் கோவில்! – கிலோ கணக்கில் வெள்ளி நன்கொடை!

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்களை கொண்டு கருவறை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க உள்ளார். இந்நிலையில் ராமர் கோவிலின் கருவறை பகுதியை வெள்ளி செங்கற்களால் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாஸ் வெள்ளி செங்கல் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்திய தங்க சங்கம் சார்பில் 33 கிலோ 664 கிராம் அளவுக் கொண்ட வெள்ளிக்கட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை கொண்டு கருவறையை நிர்மாணிக்க இவை கட்டுமான பணிகளை மேலாண்மை செய்யும் அனில் மிஸ்ராவிடம் வழங்கப்பட்டுள்ளது.