செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (16:53 IST)

12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத்.. என்சிஇஆர்டி ஒப்புதல்

12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்ற  என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
என்சிஇஆர்டி இன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் இனி இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையே இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பாட புத்தகங்களில் ஹிந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
என்சிஇஆர்டி இன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
 
Edited by Mahendran