இந்தியாவில் கொரோனா குணமடைதல் விகிதம் அதிகரிப்பு – எத்தனை சதவீதம் தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று அதில் குணமானவர்களின் எண்ணிக்கை 83 சதவீதமாக அதிகமாகியுள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமானவர்களின் எண்ணிக்கை 41 லட்சம் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கையில் 100 சதவீத உயர்வை இந்தியா கண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகும்.