கூலி வேலைக்கு சென்ற தாய்… வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு உறவினர் பாலியல் தொல்லை – அதைவிட கொடுமை?
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவருக்கு உறவினரே பாலியல் தொல்லைக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருப்பூரில் கூலி வேலை செய்த நிலையில் இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊரிலேயே இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் உறவினர் பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கணவர் திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போக அந்த குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு செல்ல உதவிக்கு மணிகண்டனை அழைத்துள்ளார். இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதனை செய்ததில் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி குழந்தையிடம் விசாரணை நடத்தியதில் ‘மணிகண்டன் மாமாதான் கடைக்கு போகலாம் என அழைத்துச் சென்று இப்படி செய்துவிட்டார்’ எனக் கூறியுள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் போலிஸில் புகாரளிக்க போக்ஸோ சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். பாலியல் தொல்லைக் கொடுத்ததும் இல்லாமல் குழந்தையோடு மருத்துவமனைக்கும் மணிகண்டன் சென்றிருப்பது மேலும் கோபத்தை அவர் மேல் வரவழைக்கும் விதமாக அமைந்துள்ளது.