சினிமா வாய்ப்புகள் இல்லை… மனைவியுடன் அடிக்கடி தகராறு -மெரினா பட நடிகர் தற்கொலை !
மெரினா படத்தில் நடித்துள்ள நடிகர் தென்னரசு என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தென்னரசு. அதன் பிறகு அவருக்கான சினிமா வாய்ப்புகள் பெரிதாக எதுவும் வரவில்லை. இந்நிலையில் அவருக்கு பவித்ரா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது. அவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள நொச்சி குப்பத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில் மன விரக்தியில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.