வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (14:25 IST)

இதுதான் உங்க ஆஃபரா? எகிறிய எதிர்பார்ப்பில் ஆப்பு வைத்த ஜியோ

இதோ வருகிறது.. அதோ வருகிறது என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை எகிறவைத்து வெளியான ஜியோ பைபரின் டேட்டா ப்ளான்களை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

செல்போன் தொலைத்தொடர்பு சேவையில் அதிக ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்த்த நிறுவனம் அம்பானியின் ஜியோ. தற்போது ப்ராட்பேண்ட் இணைய சேவையுடன், டிவி ஒளிபரப்பையும் வழங்கும் ஜியோ ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே பலர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஜியோ குறைந்த விலையில் அதிகமான சேவையை வழங்குவது ஒரு காரணம்.

செப்டம்பர் 5 முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவைகளுக்கான டேட்டா பிளான்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலை பார்த்த வாடிக்கையாளர்கள் விலைக்கு ஏற்ற அளவு டேட்டா ப்ளான் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விலையே 699 ரூபாய்க்கு தொடங்கும் இந்த ப்ளானில் மாதத்திற்கு 100 ஜிபி + 50 ஜிபி என மொத்தமாகவே 150 ஜிபி இண்டர்நெட்தான் வழங்கப்படுகிறது. 100 எம்பி வேகம் கொண்டதாக இருந்தாலும் 4K, UHD டிவிக்களில் இதை கனெக்ட் செய்தால் டேட்டா ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காது. மேலும் மற்ற இணைய நிறுவனங்கள் இதைவிட குறைவான விலைக்கே இணையத்தை தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜியோ தரப்பில் விளக்கம் அளித்துள்ளார்கள். வெறும் இணைய சேவையை மட்டும் வழங்கினால் மற்ற நிறுவனங்களை போலவே குறைந்த விலையில் தர முடியும். ஆனால் ஜியோ ஃபைபரில் மற்ற நிறுவனங்களில் இல்லாத நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன.
இலவச கால்கள், வீடியோ கால்கள் வசதி, 250க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், லட்சக்கணக்கான பாடல்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்ற பல வசதிகள் உள்ளன. மேலும் அறிமுக சலுகையாக ஜியோ செட் டாப் பாக்ஸ் இலவசமாகவே வழங்கப்படுகிறது என கூறியுள்ளனர்.