1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:30 IST)

இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் 278 ரன்கள் குவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 84 ரன்களும் ஜடேஜா 56 ரன்கள் எடுத்து உள்ளனர். இதனை அடுத்து இந்தியா தற்போது 95 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது