1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona daily cases register 19 thousand

19,000-த்தை கடந்த தினசரி பாதிப்பு… இந்திய கொரோனா நிலவரம்!

India Corona Crisis
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.


கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.

இந்தியாவில் புதிதாக 19,406 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது நாட்டின் மொத்த பாதிப்பு 4,41,26,994 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,928 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,34,65,552 ஆக உயர்ந்தது. தற்போது 1,34,793 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 571 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் மேலும் 49 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்