1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. India corona daily cases register 20 thousand

20,000-த்தை கடந்த தினசரி பாதிப்பு… இந்திய கொரோனா நிலவரம்!

India Corona Crisis
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.


கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,551 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,07,588 ஆக உயர்ந்தது. புதிதாக 70 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 526600 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,595 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 43445624 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 135364 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2,05,59,47,243 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 36,95,835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash