1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona cases and death

20 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் 1,300க்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 5,218 ஆக உயர்ந்துள்ள நிலையில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். 722 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து டெல்லியில் 2,156 பேரும், குஜராத்தில் 2,178 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,537 ஆக உள்ளது. தமிழகம் 1,596 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 19,984 ஆக உள்ளது. 3,870 பேர் குணமடைந்துள்ள நிலையில் 640 பேர் உயிரிழந்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பல நோய்களுக்கும் மருந்தாகும் தூதுவளை இலையின் பயன்கள்...!!