‘பாகிஸ்தான் தாக்குதலில் 9 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : எல்லையில் பரபரப்பு !

kashmir
sinojkiyan| Last Modified ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (14:18 IST)
இந்தியாவின் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 வீரர்கள் பலியாகி உள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் அஹீர் தகவல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்ய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதை முறியடிக்க இந்திய ராணுவத்தினர் பதிலடிகொடுத்தனர். 
 
நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவர் வீர்கள்  9 பேர் உயிரிழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் அஷீஃப் தகவல் தெரிவித்துள்ளார்.
 
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்த  நிலையில், இந்திய ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி  நீலம் பகுதியில் உள்ள  4 பயங்கரவாத முகாம்கள் அழிக்கத்துள்ளனர் என்பது  குறுப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :