வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (11:01 IST)

நாட்டின் தூய்மையான நகரங்கள்; தொடர்ந்து 6வது முறையாக முதலிடம்!?

Indore
2022ம் ஆண்டிற்கான நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தூய்மையை தொடர்ந்து பின்பற்றும் நகரங்களை கவுரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிடுகிறது. 2016 முதலாக ஸ்வச் சர்வேக்‌ஷான் என்ற இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதன்படி பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தூர் நகரம் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தூருக்கு அடுத்தப்படியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.