ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2023 (09:39 IST)

குடியரசுத்தலைவர் திரௌபதி இன்று தமிழகம் வருகை!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க நிலையில் இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து மதுரைக்கு வரும் அவரை தமிழக ஆளுனர் ஆர் என் ரவி வரவேற்கிறார்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் அவர் அங்கிருந்து கோவைக்குப் புறப்படுகிறார்.

விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் மாலை 6 மணியளவில் கோவை, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

நாளை நீலகிரி முப்படை பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார்.