ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (10:05 IST)

ஐஐடியில் பட்டம் வாங்கியவருக்கே இது தான் கதியா??..

பீகாரைச் சேர்ந்த ஐஐடியில் பட்டம் வாங்கிய இலைஞர் ஒருவர், ரயில்வே துறையில் டிராக் மேனாக பணிபுரிந்து வருகிறார்.

பீகார் மாநிலத்தைச் சேந்த ஷ்ரவன் குமார் என்பவர், மும்பை ஐ,ஐ,டியில் பி.டெக் மற்றும் எம்.டெக். ஆகிய படிப்புக்களை முடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு படிப்பை முடித்து வெளியே வந்த அவர், அரசு வேலைக்காக கடுமையாக முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரயில்வே துறையில் ஆர்.ஆர்.பி தேர்வை எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்ற அவருக்கு டி பிரிவு பணி கிடைத்துள்ளது. அதன் படி ரயில்வே டிராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார். மும்பை தாதர் ரயில் நிலையத்தில் தற்போது பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

பல இளைஞர்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் படித்தும், அவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. இந்த போக்கு பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்தாலும், ஐஐடியில் படித்த இளைஞருக்கு 10 ஆம் வகுப்பு தகுதி மட்டுமே தேவைப்படும் டிரேக் மேன் பணி கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.