திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜனவரி 2020 (17:39 IST)

எனது மகனின் நிச்சயதார்த்தம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: ஹர்திக் பாண்டியா தந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவும் பாலிவுட் நடிகை நடாஷாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டதை அடுத்து இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிச்சய்தார்த்தம் குறித்த வீடியோவை ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் தந்தை இந்த நிச்சயதார்த்தம் குறித்து கூறியபோது இந்த நிச்சயதார்த்தம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும்,  எங்களுக்கே தெரியாமல் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நடுக்கடலில் ஒரு படகில் நிச்சயதார்த்த மோதிரத்தை நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா அணிவித்த வீடியோவை பார்த்த பின்னரே தங்களது மகனுக்கு நிச்சயதார்த்தம் என்ற ஒன்று நடந்ததே தங்களுக்கு தெரிய வந்ததாக ஹர்திக் பாண்டியா குடும்பத்தினர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் முன்னதாக ஹர்திக் பாண்டியா, நடாஷாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. எனவே குடும்பத்தினர் முன்னிலையில் மீண்டும் ஒருமுறை நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறப்படுகிறது