செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (10:26 IST)

பெண்ணாக மாறி திருமணம் நண்பனை திருமணம் செய்துகொண்ட நபர் – பிறகு நடந்த அக்கிரமம் !

தெலங்கானாவில் காதலனுக்காக தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டு அவரை திருமணம் செய்துகொண்ட இளைஞன் ஒருவர் தற்போது அவர் மீது போலிஸில் புகாரளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷும் அவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த அபிஷேக்கும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் சேர்ந்து வாழும் அளவுக்கு சென்றுள்ளது. அபிஷேக்கின் நடை உடை பாவனைகள் பெண்ணைப் போலவே இருந்ததால் அவரை பெண்ணாக மாறும் பாலின அறுவை சிகிச்சை செய்துகொள்ள சந்தோஷ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் குடும்ப நிலைமையை நினைத்து அதற்கு அபிஷேக் மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரை வலியுறுத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வைத்துள்ளார் சந்தோஷ்.

இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அபிஷேக் தனது பெயரை அர்ச்சனா என்று பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். இதையடுத்து அர்ச்சனா சந்தோஷை திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துள்ளார். ஆனால் அதன் பின்னர்தான் சந்தோஷின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்துள்ளது. அர்ச்சனாவை அடித்துக் கொடுமைப்படுத்திய சந்தோஷ், இனி அவரோடு வாழ முடியாது எனவும் சொல்லியுள்ளார். இதையடுத்து அர்ச்சனா காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது புகார் அளிக்க காவல்துறையினர் சந்தோஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.