1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (10:20 IST)

மலாலா மாதிரி நான் சொந்த நாட்டை விட்டு ஓடவில்லை: காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை..!

மலாலா மாதிரி நான் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடவில்லை என்றும் காஷ்மீரில் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்றும் காஷ்மீரை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் யானா மிர் சந்தானி என்பவர் பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரை நிகழ்த்தியுள்ளார்

அவர் மேலும் பேசியதாவது: நான் மலாலா அல்ல, ஏனெனில் மலாலா நாட்டை விட்டு ஓடும் அளவுக்கு அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை, ஆனால் என் சொந்த நாடான இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் எனக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறது, என் தாய் நாட்டில் நான் சுதந்திரமாக பாதுகாப்பாக இருக்கிறேன், நான் ஒருபோதும் என் தாய் நாட்டை விட்டு ஓடி வேறு நாட்டில் தஞ்சம் அடைய மாட்டேன்

இந்தியாவின் காஷ்மீருக்கு செல்ல அக்கறை காட்டாத சமூக ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தான் காஷ்மீரில் அடக்குமுறை நிகழ்வாக இட்டுக்கட்டி கதை அளந்து வருகின்றனர். அப்படியான கதை அனைத்தையும் நான் எதிர்க்கிறேன், மதத்தின் அடிப்படையில் இந்தியாவை பிரிப்பதை நிறுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் பேசி உள்ளார்.

Edited by Siva