1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (15:10 IST)

எம்.பி. பென்ஷன் பணத்தில்தான் வாழ்கிறேன் - அதிர்ச்சி கொடுத்த தினகரன்

போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


 


அந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “ எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டும் காலை 8.30 மணிக்கு வந்தார். அவரும் போய்விட்டார். காவல் அதிகாரிகள் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. எனது பாதுகாப்பிற்காக அல்லது அந்த அதிகாரியின் பாதுகாப்பிற்கு வந்தார்களா என தெரியவில்லை. 
 
பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் சோதனை நடப்பதாக கேள்விப்பட்டேன்.  நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும், எங்களை மிரட்டிப்பார்க்கவுமே சோதனை நடக்கிறது. எதையும் சந்திக்கும் தைரியம் எங்களுக்கு உண்டு. 
 
நான் என்னுடைய எம்.பி.பென்ஷன் பணத்தில்தான் வாழ்கிறேன். என் மனைவி வியாபாரம் செய்கிறார். அதுபற்றி கேட்டால் என் மனைவி பதிலளிப்பார். பொதுச்செயலாளர் சசிகலா தற்போது சிறையில் இருக்கிறார். ஆனாலும், கட்சி நடக்கிறது. அதேபோல், நான் சிறைக்கு சென்றாலும், கடைக்கோடி தொண்டர்களில் ஒருவர் இந்த கட்சியை நடத்துவார். டெல்லி புழல் சிறை வரை நான் பார்த்துவிட்டேன். இதையெல்லாம் கண்டு அஞ்சப்போவதில்லை.
 
ஜெ.ஜெ. தொலைக்காட்சியை முடக்கியது போல் ஜெயா தொலைக்காட்சியை முடக்கும் வேலை நடக்கிறது” என அவர் தெரிவித்தார்.